Wednesday, 1 May 2013

அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு மூனுவாட்டி குளிச்சாத்தான் சரியா வரும்போல..,
மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது.
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.



காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
ஏழரை சனி;
----------------
சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, ஜென்ம ராசி(சுயராசி), ஜென்ம ராசிக்கு பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரைச் சனி என்பார்கள்.

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

முதல் சுற்று: மங்கு சனி.
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி.
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி(மரணச்சனி)!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது! மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்.

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள். ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்தான் அனுபவிக்க நேரிடும்.அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிபிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.

ஏழரைச் சனியின் முதல் இரண்டரை வருடங்களை விரையச்சனி என்பார்கள். கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். விரையச் சனி காலத்தில் பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே கழியும்.

அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த இரண்டரை வருடங்களை கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.

பொங்கு சனியில் (அதாவது இரண்டாவது சுற்றில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கிவிடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி மேலே அனுப்பி வைத்து விடுவார்..! அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும், எந்த தசா புத்தியில் அது வரும் என்பதைப் பொறுத்தும் வேறுபடலாம்..! "தசா புத்தி" என்பது என்ன என்பதை விளக்கமாக மற்றொரு பதிவில் தருகிறேன்.
அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும் சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!
சந்திராஷ்டம் என்றால் 

நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன்,இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது.ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம
ாசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.
ராசிகளும் அதற்குறிய மரங்களும்;
------------------------------------------------
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் மரங்கள் இருப்பது போலவே ராசிகளுக்கும் மரங்கள் உண்டு.அந்தந்த ராசிக்காரர்கள் பல்வேறு கிரகச்சூழலால் சிரமப்படும்பொழுது பரிகாரமாக அவர்களுக்குறிய மரங்களை நட்டு வைத்து பாராமரித்து வந்தால் துன்பங்கள் விலகும்.மகிழ்ச்சியான வாழ்வும்,செல்வமும் பெருகும்.

1.மேஷம் - செஞ்சந்தனம் (சந்தன வேங்கை )
2.ரிஷபம் - ஏழிலைப்பாலை.
3.மிதுனம் - பலா.
4.கடகம் - பலாசு (பலா மரம் அல்ல).
5.சிம்மம் - இலந்தை.
6.கன்னி - மாமரம்.
7.துலாம் - வகுளம்.
8.விருச்சிகம் - கருங்காலி.
9.தனுசு - அரசு.
10.மகரம் - தோதகத்தி.
11.கும்பம் - வன்னி.
12.மீனம் - ஆல மரம்.