Sunday, 30 March 2014

இனிய காலை வணக்கம் .குருபெயர்ச்சி பதிவுகள் ஆரம்பமாகி விட்டது . படியுங்க .. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்..என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தியானிக்கிறேன் ....ஓம் கம் கணபதயே ஸ்வாஹா
12 ஆண்டுகளுக்குப்பின் 
குரு பகவான் புனர்பூசம் நட்ச்சத்திரத்தை நோக்கி வருகை ஆரம்பமாகி விட்டது . " புனர்பூசம் " மிதுன , கடக ராசிகள் 
சம்பந்தப் பட்டது .
இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெறும் குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும்.

வருகிற வைகாசி மாதம் குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
13.06.2014 ஜீன் மாதம் முதல் கடகத்தில் குரு இயக்கம் ஆரம்பமாகும். வாக்கிய பஞ்சாங்கப்படி அன்று மாலை மணி 03.48 P.M. க்கு கடக ராசி பிரவேசமாகிறார் .
வளங்களை வரங்களாகப் பெற . குரு பெயர்ச்சி வாழ்

த்துக்கள்!

Friday, 20 December 2013

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். 

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர். 

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

Thursday, 19 December 2013

நட்சத்திரங்கள் இருபத்தேழில் "திரு' என்ற அடைமொழியுடன் இரண்டு நட்சத்திரங்களே உள்ளன. அவை திருவாதிரை, திருவோணம் என்பன.

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நாள்; திருவோணம் திருமாலுக்கு சிறந்த நாள்.
"மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் கண்ணன். 
இந்த மாதமே தேவர்கள் நாளில் வைகறைப் பொழுதாகக் கருதப்படுகிறது.
நாளை திருவாதிரை தரிசனம் . நடராஜர் நடனம் ஆடுவார் , உமையவள் ஒளிந்துகொண்டு காணுவாள்......

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில்
உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?

சிறுவயதில் செய்யும்
தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்கமுடியாது 

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….


பேருந்துக்குள் கொணர்ந்து 
மாலைமுரசு விற்பார்கள். 

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
அமர இடம் கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !