Friday, 20 December 2013

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். 

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர். 

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

Thursday, 19 December 2013

நட்சத்திரங்கள் இருபத்தேழில் "திரு' என்ற அடைமொழியுடன் இரண்டு நட்சத்திரங்களே உள்ளன. அவை திருவாதிரை, திருவோணம் என்பன.

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நாள்; திருவோணம் திருமாலுக்கு சிறந்த நாள்.
"மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் கண்ணன். 
இந்த மாதமே தேவர்கள் நாளில் வைகறைப் பொழுதாகக் கருதப்படுகிறது.
நாளை திருவாதிரை தரிசனம் . நடராஜர் நடனம் ஆடுவார் , உமையவள் ஒளிந்துகொண்டு காணுவாள்......

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில்
உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?

சிறுவயதில் செய்யும்
தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்கமுடியாது 

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….


பேருந்துக்குள் கொணர்ந்து 
மாலைமுரசு விற்பார்கள். 

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
அமர இடம் கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !
"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது அனுபவ பழமொழி.
தீய பார்வையுடையோர் பார்ப்பதால் கண்திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உண்டு ,
சொல்லொணா துயரங்களில் நாம் ஆட்படும்போது அதிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுபவை திருஷ்டி பரிகாரமாகவும் இருக்கலாம்.

தெருவில் பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.

மௌலி — with Reach Geetha.

Wednesday, 1 May 2013

அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு மூனுவாட்டி குளிச்சாத்தான் சரியா வரும்போல..,
மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது.
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.



காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
ஏழரை சனி;
----------------
சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, ஜென்ம ராசி(சுயராசி), ஜென்ம ராசிக்கு பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரைச் சனி என்பார்கள்.

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

முதல் சுற்று: மங்கு சனி.
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி.
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி(மரணச்சனி)!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது! மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்.

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள். ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்தான் அனுபவிக்க நேரிடும்.அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிபிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.

ஏழரைச் சனியின் முதல் இரண்டரை வருடங்களை விரையச்சனி என்பார்கள். கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். விரையச் சனி காலத்தில் பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே கழியும்.

அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த இரண்டரை வருடங்களை கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.

பொங்கு சனியில் (அதாவது இரண்டாவது சுற்றில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கிவிடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி மேலே அனுப்பி வைத்து விடுவார்..! அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும், எந்த தசா புத்தியில் அது வரும் என்பதைப் பொறுத்தும் வேறுபடலாம்..! "தசா புத்தி" என்பது என்ன என்பதை விளக்கமாக மற்றொரு பதிவில் தருகிறேன்.
அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும் சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!
சந்திராஷ்டம் என்றால் 

நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன்,இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது.ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம
ாசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.
ராசிகளும் அதற்குறிய மரங்களும்;
------------------------------------------------
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் மரங்கள் இருப்பது போலவே ராசிகளுக்கும் மரங்கள் உண்டு.அந்தந்த ராசிக்காரர்கள் பல்வேறு கிரகச்சூழலால் சிரமப்படும்பொழுது பரிகாரமாக அவர்களுக்குறிய மரங்களை நட்டு வைத்து பாராமரித்து வந்தால் துன்பங்கள் விலகும்.மகிழ்ச்சியான வாழ்வும்,செல்வமும் பெருகும்.

1.மேஷம் - செஞ்சந்தனம் (சந்தன வேங்கை )
2.ரிஷபம் - ஏழிலைப்பாலை.
3.மிதுனம் - பலா.
4.கடகம் - பலாசு (பலா மரம் அல்ல).
5.சிம்மம் - இலந்தை.
6.கன்னி - மாமரம்.
7.துலாம் - வகுளம்.
8.விருச்சிகம் - கருங்காலி.
9.தனுசு - அரசு.
10.மகரம் - தோதகத்தி.
11.கும்பம் - வன்னி.
12.மீனம் - ஆல மரம்.

Tuesday, 2 April 2013

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

கொடுக்காப்புளி!!
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.
நல்ல ஆரம்பம் இன்று
சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். நவகிரகங்களில் சுக்கிரனுக்கு வெள்ளை .
வெள்ளைக்கொடியே சமாதானமும் செய்யும் 
இவ்வளவு ஏன்? மனசும் வெள்ளை தான் .
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? 

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

அப்பா ,
நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? 

குடும்பத்தில் பிரச்சணை வரும் பொழுது அம்மா நம்மிடம் வந்து அழுவார்.ஆனால் அப்பா?,எங்கே சென்று அழுவார்?? 
அவரின் அழுகை கோபமாக தான் வெளிப்படும்,அந்த ஐந்து நிமிடம் நம்மை திட்டுவார்,இத்தனை வருடமாக நம்மை அனுசரித்து நமக்காக எல்லாம் செய்த அப்பவிற்காக அந்த ஐந்து நிமிடம் கூட நாம் நம் அப்பாவை அனுசரித்து போவதில்லை.

நமக்கு உலகத்தில் மிகச்சிறந்த அப்பா கிடைத்துள்ளார்,அவருக்கு நீங்கள் மிகச்சிறந்த மகனாக அல்லது மகளாக வேண்டு என்பதில்லை..ஒரு நல்ல மனிதனாக அவரை மதியுங்கள்.அது போதும்.

வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு உகந்தது. 
அதன் நுனி பக்கம் இடது கை பக்கமாகத்தான் போடுவார்கள்.

ஏன் அவ்வாறு போடுகிறார்கள்?


நுனி இடது பக்கம் இருக்குமானால் நாம் சாப்பிடும் பக்கம் முத்தி இருக்கும்.எதிர்பக்கம் இளம் இலையாக இருக்கும். இந்த மாதிரி வைத்துசாப்பிடும்போது நமது கை நகம் பட்டு இலை அவ்வளவு சீக்கிரம் கிழியாது.

இலையில் ஓடும் நரம்புகள் நமது வலது கை பழக்கத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும்

இதுவே எதிர்புறம் என்றால் இளம் இலை வெகு சீக்கிரம் கிழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

இப்ப இலையை எந்த பக்கம் மடிப்பது என்ற பிரச்னைக்கு வருவோம்.

உணர்வு பூர்வமாக , விருப்பு , வெறுப்பை குறிப்பால் உணர்த்த நம் முன்னோர்கள் புகுத்தினார்கள். விருப்பம் எனில் உன் பக்கம் மடி . வெறுப்பு எனில் எதிர் பக்கம் மடி என்று .

உங்களை யாராவது ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். 
யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.